அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே நடத்திட வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழகப் பணிமனை முன்பு  சி.ஐ.டி.யு   தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-05-28 14:16 GMT
மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   மண்டல பொருளாளர் பாரதிமோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்திட வேண்டும், மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், முழுமையாக ஒப்பந்த நிலுவை தொகை வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்ற பண பலன்களை வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனர்.

Similar News