ஏழு ஏக்கர் குளத்தில் ஆகாயத்தாமரையால் பொதுமக்கள் விரக்தி
நான்கு ஆண்டாக ஆகாயதாமரை அதற்றாத குளத்தை பார்வையிட உயர்கல்வி அமைச்சரை வற்புறுத்தி அழைத்துச்சென்ற பொதுமக்கள் சரிசெய்யவில்லை என்றால் திமுகவிற்கு ஓட்டுஇல்லை;
மயிலாடுதுறையை அடுத்துளள பட்டமங்கலம் ஊராட்சியில் திமுக சார்வில் நலதிட்ட உதவி வழங்கும் விழாவிற்கு வந்திருந்த உயர்கல்வி அமைச்சர் கோவி செழியனை அப்பகுதி மக்கள் வற்புறுத்தி அழைத்தனர். அங்கே 6 ஏக்கர் சுற்றளவுள்ள குளத்தில் ஆகாயத்தாமரை மண்டிக்கிடந்ததால் அதை உபயோகப்படுத்த முடியாமல் தவித்துவருவதாகவும் உடனடியாக சரிசெய்யவேண்டும் இல்லை என்றால் இந்த முறை திமுகவுக்கு வாக்களிக்காமல் மாற்றி அளிப்போம் என்று ஒரசிலர் குமுறினர். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்துச் சென்றார்.