கிரிக்கெட் போட்டியில் ஆர்டி டைட்டன்ஸ் அணி வெற்றி
ஈரோட்டில் நடந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆர்டி டைட்டன்ஸ் அணி வெற்றி;
ஈரோட்டில் எஸ்எஸ்எஸ் மருத்துவமனை மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா, ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 இணைந்து பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தியது. ப்ளைசோ 33 உரிமையாளர்கள் சரவணன், சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்எஸ்எஸ் மருத்துவமனை சார்ந்த டேபிளர் சஞ்சித் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக உப தலைவர் அருண், டேபிளர்கள் பிரதீப், ரகுல், கோகுல், யுகேந்தர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இதில், ஆர்டி டைட்டன்ஸ் அணி முதலிடத்தை பிடித்து, ரூ.50 ஆயிரம் ரொக்கம், கோப்பையையும் வென்றது. இதையடுத்து வெற்றி பெற்ற அணியின் வீரர்களை பாராட்டி பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது