புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது;
ஈரோடு மாவட்டம், சிறுவலூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட அயலூர், வெள்ளப்பாறை மேடு பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள சிக்கன் கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், கடை உரிமையாளரான, அயலூர், சமத்துவபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடையில் வைக்கப் பட்டிருந்த 1.3 கிலோ புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.