மது கடத்தி வந்தவர் கைது

கர்நாடக மாநில மது கடத்தி வந்தவர் கைது;

Update: 2025-05-29 09:55 GMT
ஈரோடு மாவட்டம் ஆசனூர் சோதனைச் சாவடியில் நேற்று போலீசார் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.அப்போது, அவர் கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கோவை மாவட்டம், கருமத்தப்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர் கடத்தி வந்த 2 மது பாட்டில்கள், 2 மது பாக்கெட்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Similar News