தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் அரசு எச்சரிக்கை
வரும் 1ம் தேதி தமிழில் பெயர் பலகை திறப்பு விழா;
ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 1ம் தேதி, வ.உ.சி பூங்காவில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் தமிழில் பெயர் பலகை திறப்பு விழா நடைபெறுகிறது. அச்சங்கத்தின் தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துக் கொண்டு, பெயர் பலகையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, உறுப்பினர் அடையாள அட்டை வழங்க உள்ளார்