விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் பஞ்சமுக தீபாராதனை

செம்பனார்கோவிலில் உள்ள செங்கழநீர் விநாயகர் ஆலயத்தில் ஸம்வத்ஸராபிஷேக திருவிழாவில் விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;

Update: 2025-06-01 05:17 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் திலகர் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செங்கழநீர் விநாயகர் திருக்கோயில் உள்ளது. இவ்வாலயத்தின் இரண்டாம் வருட ஸம்வத்ஸரா அபிஷேக திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகா கணபதி மூலமந்திர ஹோமம், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து செங்கழநீர் விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவருட்பிரசாதம் படைக்கப்பட்டது. பின்னர் பஞ்சமுக தீபாராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் விநாயகருக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் கோவில் நிர்வாகத்தினர் அன்னதானம் வழங்கினர்.

Similar News