அரசுப் பள்ளியில் விலையில்லா பாட புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி சீருடை வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ.
ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாட புத்தகம் நோட்டு மற்றும் பள்ளி சீருடைகளை வழங்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.;
அரியலூர், ஜூன்.2- ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பள்ளிச் சீருடைகள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 350 மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார். நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சங்கர், ஜெயங்கொண்டம் நகர மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக ஆசிரியர் சௌந்தரபாண்டியன் அனைவரையும் வரவேற்றார், நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தனசேகர், , மணிமாறன், கணேசன் 13-வது வார்டு கவுன்சிலர் சங்கர்,14 ஆவது வார்டு கவுன்சிலர் ராஜமாணிக்கம் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜாத்தி, நிர்மலா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் ஆசிரியர் நீதி உள்ளிட்ட பள்ளி இருபால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.