அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்
அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி மற்றும் மாணவிகள் விடுதி அமைத்து தர கோரியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.;
பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி மற்றும் மாணவிகள் விடுதி அமைத்து தர கோரியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் குதரத்துல்லா மாவட்டச் செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி,மமக மாவட்டத் துணைச் செயலாளர் முகம்மது அனிபா, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பீர் முகமது மற்றும் நகரச் செயலாளர் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.