பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-06-04 13:29 GMT
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பரமத்தி வேலூர் பேரூராட்சி மூன்றாவது வார்டு ஓவியம் பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூட்டத்தினை பார்வையிட்டு, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், பாவடி தெரு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குடிநீர், மின்வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவுப்பொருட்களின் இருப்பு, குழந்தைகளின் வருகை, குழந்தைகளின் உயரம், எடை, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பரமத்தி பேரூராட்சி கடைவீதி பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணறு பகுதிக்கு சுற்றுச்சுவர் அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம், விற்பனை விபரம், பொருட்களின் காலாவதி காலம், குளிர்பானங்கள் தரம் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்களின் வருகை பதிவேடு, கோப்புகளின் விபரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News