புதிய மின் மோட்டார் மற்றும் மினிடேங்க் திறந்து வைத்த தர்மபுரி எம்எல்ஏ
சோகத்தூர் மேட்டு தெரு பகுதியில் புதிய மின் மோட்டார் மினி டேங்க் தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் திறந்து வைத்தார்..;
தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோகத்தூர் ஊராட்சி, மேட்டுத்தெரு செல்லும் வழியில் பெருமாள் கோவில் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டாருடன் மினி டேங்க் அமைக்கப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் த.கே.சின்னசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கராஜ், நிர்வாகிகள் துரை, திருப்பதி, தங்கதுரை, விஜி, சம்பத் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.