டாஸ்மாக் கடை அருகே குப்பைக்குத் தீ
மயிலாடுதுறை கூறைநாட்டில் டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு;
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் கூறைநாடு பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கூறைநாடு பேருந்து நிறுத்தம் அருகே குடிமகன்கள் மதுபாட்டில்கள் மற்றும் அது தொடர்பான குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று குடிமகன் ஒருவர் குப்பைகளை பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தீ பற்றி எரிந்து புகைமூட்டம் ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சரியான நேரத்தில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.