திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்ட மங்கள வேல்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து மங்கள வேல் மாநாட்டு அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.;
மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து மாநாட்டு திடலை நோக்கி மங்கள வேல் இன்று (ஜூன்.9) புறப்பட்டது. முன்னதாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சேவுகன் தலைமையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மதுரையில் ஜூன் 22 லவ் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட உள்ள ஆறுபடை வீடு அருட்காட்சியில் பக்தர்களின் தரிசனத்திற்காக இந்த வேல் வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.