விவசாயிகள் கடனு க்கு சிபில் ஸ்கோர் எதிர்ப்பு
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் நடைமுறையை ரத்து செய்ய கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு ;
விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் பார்த்து வழங்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் பெறக்கூடிய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் கடன் மற்றும் நகை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வாங்கியுள்ள விவசாயிகள் காலதாமதமாக தவணை கட்டும் பட்சத்தில் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே சிபில் ஸ்கோர் முறையை முற்றிலுமாக அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தை சந்தித்து மனு வழங்கினர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுத்துவிடுகின்றனர் , தமிழக முதல்வர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் கூட்டுறவு துறையின் சுற்று அறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.