சத்துணவு முட்டை சிறுத்தது ஏன் நடவடிக்கை கோரிக்கை

மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த எடையில்  முட்டையை மதிய உணவில் வழங்க   நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பினர்    மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள்;

Update: 2025-06-09 14:43 GMT
தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தின் மூலம் மதிய உணவில் மாணவர்களுக்கு வழங்கும்   ஒரு முட்டை 46 கிராம் முதல் 52 கிராம் வரை இருக்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பினர் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முட்டை 36 கிராம் முதல் 40 கிராம் வரை மட்டுமே உள்ளதாகவும். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.   தொடர்ந்து மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் ஆட்சியர் ஸ்ரீகாந்தை நேரில் சந்தித்து   அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்து 46 கிராம் முதல் 52 கிராம் வரை இருக்கும்  முட்டையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News