மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி
மயிலாடுதுறை அருகே கிழாயில் ஆடு மேய்க்க சென்ற ராஜா தாழ்வாக இருந்த மின்கம்பியிலிருநாது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு;
மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (60) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்றுமாலை வயல்வெளியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார், தாழ்வாகி இருந்த மின்கம்பியை கவனிக்காமல் சென்றபோது மின்கம்பி அவரது கழத்தில் உரசி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். நேற்றுமுன்தினம் இடி மின்னல் காற்றுடன் மழை பெய்தபோது மின்கம்பி தாழ்ந்துள்ளதால் இந்த விபத்தாகும்.