கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம்
தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய ரூ. 2500 கோடி கல்வி தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து உடனே வழங்க கோரி மக்கள் மசோதா கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குவிந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:-;
. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மக்கள் மசோதா கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் மசோதா கட்சி பொதுச் செயலாளர் ரூபன் தலைமையில் டாட்டா ஏசி வாகனத்தில் மேடை அமைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய ரூ. 2500 கோடி கல்வி தொகையை உடனே வழங்கவும், தொடக்க கல்வி முதல் பொதுத் தேர்வு வரை தாய் மொழியிலேயே கல்வி கற்பதற்கு வழி வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.