வாலாஜா அருகே அரசு பேருந்து விபத்து!
அரசு பேருந்து விபத்து - போலீஸ் விசாரணை;
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே எம்ரால்டு நகர் பகுதியில், தாம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, சாலையின் குறுக்கே திடீரென வந்த மாட்டை தவிர்க்க முயன்றபோது முன்னே சென்ற காரை மோதியது. அதன் பின்னர் அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.