மயிலாடுதுறை ஆர்.ட்டி.ஓ. அலுவலகத்தில் அதிகாரிகள் பெயரில் போலி கையொப்பம்

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளர் கையொப்பத்தை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போட்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2025-06-17 13:16 GMT
ஜப்தி செய்யப்பட்ட டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அகரஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான மதன்மோகன். இவர் கடந்த 2019- ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தின் விவசாயக்கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். கொரோனா தொற்றுக்காலத்தில் தவணை முறையாக செலுத்த முடியாத நிலையில் 2021-ல் மதன்மோகனின் 2 டிராக்டர்களையும் ஜப்தி செய்ததோடு, அவரது கையெழுத்தை போலியாக போட்டு பெயரை மாற்றி டிராக்டரை விற்பனை செய்து மோசடி செய்ததாக மதன்மோகன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Similar News