நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
மதுரை திருமங்கலம் அருகே நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்;
தமிழக முன்னாள் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கள்ளிக்குடி வடக்கு ஒன்றியம் செங்கப்படை கிராமத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நேற்று (ஜூன்.23) இரவு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் 1500 குடும்ப தாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.