தர்மபுரியில் தக்காளி விலை உயர்வு

வரத்து சரிந்ததன் காரணமாக தர்மபுரியில் தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி;

Update: 2025-06-24 06:21 GMT
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தக்காளி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக விலை சரிந்து காணப்பட்டது. தற்போது விளைச்சல் குறைந்துள்ளதை அடுத்து தர்மபுரி உழவர் சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தற்போது உழவர் சந்தையில் இன்று ஜூன் 24 ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 32 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.வரும் நாட்களில் வரத்து சரிவால் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News