ஓஎன்ஜிசிக்கு எதிராக மீண்டும் துவங்கும் போராட்டம்
ஓ.என். ஜி.சி நிறுவனம் மராமத்து என்ற பெயரில் பழைய எண்ணை கிணறுகளை புதுப்பிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த கோரி பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு;
மயிலாடுதுறை அருகே பல்வேறு பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைந்துள்ளது. மகாராஜபுரம் ஊராட்சியில் காளி 2 என்கிற பெயரில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எண்ணெய் கிணற்றை தற்போது மராமத்து பணிகள் மேற்கொள்வதாக தெரிவித்து கனரக இயந்திரங்கள் ரசாயன பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வந்து இறக்கியுள்ளனர். இதனால் முற்றிலும் பாதிக்கும். ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்னர்.காளி-10 என்ற எண்ணெய் கிணற்றை மராமத்து பணிகள் மேற்கொண்டதன் விளைவாக அப்பகுதியில் நிலத்தடிநீர் உப்பு தன்மை அதிகரித்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதால் குழந்தைகள் ஊனமுற்றுள்ளனர்.என பலருக்கு தொடர் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. தற்பொழுது மராமத்து பணிகள் செய்வதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தளவாடங்களை இறக்கியுள்ளனர். மராமத்து பணி ஓரிரு நாட்களோ அல்லது ஒரு வாரமோ நடக்கலாம் ஆனால் இவர்கள் ஒன்றரை மாதங்களைக் கடந்து பணியை மேற்கொள்கிறார்கள் இது புதிய கிணறு அமைப்பதற்கான காலமாகும். மராமத்து பணி என்ற பெயரில் பழைய கிணற்றில் இவர்கள் புதிய பணியை மேற்கொள்கிறார்கள். இது சட்டப்படி தவறானது. இ.ஐ.ஏ 2006 அறிவிப்பாணை மற்றும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டப்படியும் தவறானது. இது புதிய செயல்பாட்டில் வரும் என்பதால்தான் பாண்டூர், பொண்ணூர், மணலூர் கிராமமக்களுடன் சேர்ந்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் தோழமை அமைப்புகள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் காவிரி படுகையில் உள்ள பழைய கிணறுகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கூறினார்.