பிரதான சாலைகளை இணைக்கும் சாலையை சரி செய்யக்கோரி மனு
மயிலாடுதுறையை ஒட்டியுள்ள கூட்டுறவு நகர் பகுதி வழியாக பூம்புகார்-சீர்காழி சாலையை இணைக்கும் பழுதடைந்த பிரதான சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தராததைக் கண்டித்து சாலைமறிய்ல் போராட்டம் நடத்தப்படும் என்றுமாவட்ட ஆட்சியரிடம் தகவல்;
மயிலாடுதுறையை அடுத்துள்ள கூட்டுறவு நகர் வழியாக சீர்காழி- பூம்புகார் சாலையை இணைக்கும் நகர் பிரதான சாலை வாகனங்களில் செல்ல முடியாத அளவில் மிகவும் பழுதடைந்த மோசமாக உள்ளது. இ ந்த சாலையை செப்பனிட்டு புதிய தார் சாலை அமைத்து பிரதான சாலையை இணைக்கும் உடைந்த பாலத்தை சரி செய்து தர வேண்டி கிராமசபை கூட்டம், மக்களைத் தேடி முதல்வர் முகாம், எம் எல் ஏ, எம்.பி, மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் மனு அளித்து புதிய தார் சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கூட்டுறவு நகர்வாசிகள் சங்கம், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டி வருகின்ற 27 ஆம் தேதி சீர்காழி சிதம்பரம் செல்லும் பிரதான சாலையில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.