விவசாயியை வெளியே போ என்றதால் ஆத்திரமடைந்தவர்கள்- மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்   மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய அதிகாரிகள் கலந்துகொண்டபோது விவசாயியை வெளியே போய் இந்த அதிகாரியை கண்டித்ததால் பரபரப்பு;

Update: 2025-06-28 14:28 GMT
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயியை . வெளியே போ என்ற அதிகாரியை கண்டித்த விவசாயிகள் –     சென்ற கூட்டத்தில் வைக்கப்பட்ட   8 கோரிக்கை  கேள்விகளுக்கு இதவரை ஒருவரும் பதில் அளிக்கவில்லை என்றும்    ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சை பயிறு கொள்முதல் செய்வதை  அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.    ஒழங்குமுறை மாவட்ட விற்பனை பிரிவு செயலர் வெளியே போ என்று கூறியதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் அதிகாரியை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.    வீரமணி என்ற விவசாயி தான் விளைவித்த பச்சை பயிரை கொள்முதல் செய்ய மறுத்ததால் மாட்டிற்கு தீவனம் வைக்கப் பயன்படுத்தியதாக வேதனை தெரிவித்தார்.  .பச்சைப்பயறு முழுவதுமாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்,       வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் துவக்க நிகழ்ச்சி மற்றும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News