பள்ளி மாணவிகள் யோகாசன பயிற்சி-ஆதீனம் பார்வையிட்டார்
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி சௌந்தர் திறந்து வைத்தார்:- மாணவர்களின் யோகா மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்;
. மயிலாடுதுறையில் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தருமை ஆதீனம் நடத்தி வருகிறது. 27-வது சந்நிதானத்தின் மணிவிழா முன்னிட்டு 15 வகுப்பறைக் கட்டடம், 2 உடற்கல்விக்கூடம் உள்ளிட்டவை அடங்கிய புதிய பள்ளிக்கட்டடம் ‘ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக மணிவிழா நிலையம்” என்ற பெயரில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தர் புதிய கட்டடத்தை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றினார். 27-வது சந்நிதானம் தலைமையில் இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார். முன்னதாக, இதில், பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய யோகா சாகச நிகழ்வு மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டது வியக்க வைத்தனர்