முதலமைச்சர் பொது நிவாரண நிதி மாவட்ட வருவாய் அலுவலர் பொது மக்களுக்கு வழங்கினார்

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 நபர்களுக்குரூ.6.00 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி காசோலைகளை வழங்கினார்.;

Update: 2025-07-01 08:16 GMT
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, கலைஞரின் கனவு இல்லம், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு மற்றும் காவல்; துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 430 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்;. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பல்வேறு எதிர்பாராத விபத்துகளில் உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு வருவாய்த்துறை சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6.00 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

Similar News