நீடூர் கொலைக்கான காரணம்

மயிலாடுதுறை நீடூரில் இளைஞரை வெட்டிப்படுகொலை செய்த வழக்கில் மூன்று பேர் கைது;

Update: 2025-07-02 05:26 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த இளைஞர் முகமது ஹாலிக் (36) என்பவரை கடந்த 24ஆம் தேதி மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர் பட்டாகத்தியால் வெட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முகமது ஹாலிக் 25ஆம் தேதி காலை உயிரிழந்தார். முகமது ஹாலிக்கை வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஹாலிக்கை கொலை செய்த மேமாத்தூரைச் சேர்ந்த சரண்ராஜ் (28), ஆறுபாதியைச் சேர்ந்த விஜய் (28), தில்லையாடியைச் சேர்ந்த விஜயகாந்த் (20). ஆகிய மூவரை டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர்.இவர்கள் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரண்டர் ஆக போகிறார்கள் வழக்கறிஞர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுவந்து, மயிலாடுதுறை போலீசார் நேற்று மாலை முதல் இரவு 7.30 மணி வரை நீதிமன்றத்தை சுற்றி வளைத்திருந்தனர், இந்நிலையில் மூவரையும் கடலூர் மாவட்டத்தில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்களின் புகைப்படங்களை செய்தியாளர்களிடம் அளித்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் 2 நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நீடூரை சேர்ந்த பிரபல ரவுடி விஜயை மதுரை போலீசார் தேடியபோது அவரது உறவினர்கள் வீட்டை ஹாலிக் காட்டிக் கொடுத்ததாகவும் இதனால் விஜய் ஆள் வைத்து இதை செய்ததிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்துவருவதாக கூறப்படுகிறது. ராணுவ ரகசியம் காப்பதுபோல் போலீசார் பில்டப் கொடுத்துவருகின்றனர்.

Similar News