நீரில் மூழ்கி லாரி டிரைவர் பலி
காவிரி ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலி நண்பர்கள் கண் முன்னே நடந்த சோகம்;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், தாதான் குட்டை, சாமியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (32). பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தனசேகரன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களுடன் லாரிகள் சென்று உள்ளார். அப்போது ஈரோடு மாவட்டம் பாசூர் பேரேஜ் அருகே உள்ள காவிரி ஆற்றில் தனசேகரன் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தனசேகரன் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் நேரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் வந்து தனசேகரனை மீட்டனர். அப்போது அவர் மயக்கத்தில் இருந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே தனசேகரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.