பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
ஓரணியில் தமிழ்நாடு, மொடக்குறிச்சி தொகுதி பாக முகவர்கள் கூட்டம்;
ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் மூலம் ஒன்றாக சேர்ந்து தமிழ்நாட்டு உரிமையை , பாதுகாக்கவும் ஒன்றிய அரசுடன் போராடுவதற்கு வலிமையை ஏற்படுத்த வேண்டும் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.ஓரணியில் தமிழ்நாடு, மொடக்குறிச்சி தொகுதி பாக முகவர்கள் கூட்டம் மொடக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் மொடக்குறிச்சி மேற்கு குணசேகரன், மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு விஜயகுமார், கொடுமுடி வடக்கு முத்துக்குமார், கொடுமுடி தெற்கு சிவக்குமார், கொடுமுடி மேற்கு நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில்,ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதலமைச்சர் துவக்கியுள்ளார். பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொரு , பூத்திலும் பணிகளை துவக்கி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தமிழ்நாடு உரிமை பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிய அரசுடன் போராடுவதற்கும் வலிமையை ஏற்படுத்த வேண்டும். கட்சி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு என்ற அக்கறை இருக்க வேண்டும். தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நம்மை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு உரிமையை போராடி பெறுவதற்கு ஓரணியில் தமிழ்நாடு என்று அறிவித்து துவக்கி செயல்படுகிறோம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மொடக்குறிச்சி தொகுதி 62 ஆயிரம் வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் பெற்ற தொகுதியாக மொடக்குறிச்சி தொகுதி முதலிடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வீடாகச் சென்று நாம் செய்த பணிகளைச் சொல்லி கேட்க வேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்டு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள 277 பூத்களிலும் பணிகளை செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் முதலில் நாட்டுக்கு பிறகு கட்சிக்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும். என இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ., சந்திரகுமார் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மொடக்குறிச்சி பேரூர் செயலாளர் சரவணன், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.