யானை மேல் அழகர் அய்யனார் ஆலய குடமுழுக்கு விழா

மயிலாடுதுறை அடுத்த அடியமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த யானைமேல் அழகர் அய்யனார் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு;

Update: 2025-07-02 13:13 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த அடியமங்கலம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த யானைமேல் அழகர் அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயம் சிதிலமடைந்த நிலையில் அதனை மீண்டும் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது நான்காவது கால யாகசாலை பூஜை இன்று நிறைவடைந்த நிலையில் யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அய்யனார் மற்றும் 16 பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News