காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் மாரண்டஹள்ளி காவல்நிலையத்தில் தஞ்சம்,;

Update: 2025-07-03 11:33 GMT
மாரண்டஅள்ளி அடுத்த எம்.செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி இவரும், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலையும், காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த மாதம் 15ம்தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டு, நண்பரின் வீட்டில் தங்கி இருந்தனர். பெற்றோரின் புகாரின் பேரில், போலீசார் தேடுவதை அறிந்து, நேற்று மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இன்று, காவலர்கள் இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்து இறுதியில் நந்தினியை கணவனுடன் அனுப்பி வைத்தனர்.

Similar News