ஆசனூர் அருகே சிறுத்தை தாக்கி குதிரை பலி

ஆசனூர் அருகே சிறுத்தை தாக்கி குதிரை பலி;

Update: 2025-07-04 07:02 GMT
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம் ஆசனூர் மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே நேற்று இரவு வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை குதிரையை துரத்திச் சென்று தாக்கி கொன்றது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசனூர் பகுதியில் தினம்தோறும் ஊருக்குள் நுழைந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை, மனித உயிர் சேதம் ஏதும் ஏற்படும் முன் வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News