பால்குடம் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

மதுரை சோழவந்தான் அருகே காளியம்மன் கோயில் திருவிழாவில் பால்குடம் ,, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.;

Update: 2025-07-09 07:40 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவேடகம் வைகை ஆற்றில் இருந்து நேற்று (ஜூலை.8) பால்குடம் அக்னி சட்டி அலகு குத்தி ஊர்வலமாக வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News