தண்ணீர் குழாய் இருக்கு ஆனா தண்ணி வர்றதில்லை ............

தூனேரி ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் மக்கள் குமுறல் ......................;

Update: 2025-07-10 14:52 GMT
தண்ணீர் குழாய் இருக்கு ஆனா தண்ணி வர்றதில்லை ............ தூனேரி ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் மக்கள் குமுறல் ...................... நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் தூனேரி ஊராட்சி வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் அமைத்து தந்தும் தற்போது வரை எவ்வித பயனும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இரவு நேரங்களில் மின் விளக்கு எரிவது இல்லை எனவும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுவதால் குழந்தைகள் வைத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இடமும் ஊராட்சி நிர்வாகத்திலும் முறையிட்டும் எவ்வித பயணம் இல்லை எனவே விரைந்து தங்களது பகுதிக்கு தண்ணீர் பிரச்சனையும் மின் விளக்கு பிரச்சனைகளையும் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News