ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு வினாடிக்கு 24ஆயிரம் கன அடியாக குறைந்தது.;
கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரளா மாநிலத்திலும் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே கன மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆறு வழியாக கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இந்த உபரி நீரானது தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்து மேட்டூர் அணைக்கு செல்கின்றன. நேற்று காலை 8 மணியளவில் நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 24ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது மேலும் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நீர்வரத்தால் மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்படும். இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி தொடர்ந்து மாவட்ட நிர்வாகமானது அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிப்பதற்கும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.