இத்தாலி நாட்டை தாயகமாக கொண்ட மருத்துவ குணம் வாய்ந்த சுகுனி காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி................................

பயிரிட்ட காலம் முதல் ஒன்றரை மாதத்தில் விளைவதால் சுகுனி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் ................;

Update: 2025-07-13 14:09 GMT
இத்தாலி நாட்டை தாயகமாக கொண்ட மருத்துவ குணம் வாய்ந்த சுகுனி காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி................................ பயிரிட்ட காலம் முதல் ஒன்றரை மாதத்தில் விளைவதால் சுகுனி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் ................ உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். மேலும் ஒருசில விவசாயிகள் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி போன்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலி‌‌ஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக உதகையை அடுத்த கொதுமுடி அகலார் கூக்கல்தொரை, பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சுகுனி காய் பயிரிட்டு உள்ளனர். மேலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுகுனி காய் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலி நாட்டை தாயகமாக கொண்ட இவ்வகை காய், மருத்துவ குணம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளதால், இங்கிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போதுகிலோவுக்கு 60 முதல் 70 ரூபாய் வரை விலை போவதால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றன மேலும் உதகை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகுனி காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது குறிப்பிட்டதக்கது.

Similar News