மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-07-14 14:31 GMT
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 640 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்ன அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், 28.05.2025 முதல் 18.06.2025 வரை தெரு நாய்கள் கடித்து பிண பரிசோதனை செய்யப்பட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், 14 கால்நடை வளர்போருக்கு ரூ.2.40 இழப்பீடு தொகையினை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.வீ.பழனிவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News