நீலகிரி மாவட்டம் குன்னூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் இன்று துவங்கியது

பொதுமக்களின் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது......;

Update: 2025-07-15 14:26 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது........ தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறும் நிலையில் நகர்ப்புறங்களில்13 துறைகள் மற்றும் 43 சேவைகள் ஊரகப் பகுதிகளில்15 துறைகள் மற்றும் 46 சேவைகள் நடைபெறும் நிலையில் இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெயின் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை தமிழக அரசு தலைமை கொறாடா கா, ராமச்சந்திரன்,மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ஆகியோர் துவக்கி வைத்தனர் இதில் குன்னூர் நகர பகுதிகளில் உள்ள பொதுமக்களின் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது இதில் குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை புதிய குடும்ப அட்டைகள் மற்றும் முதியோர்களுக்கான பென்ஷன் பட்டா சிட்டா போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டது இந்நிகழ்ச்சியில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து பொதுமக்களின் மனுக்களை பெற்றனர்இதனால் குன்னூர் நகரப் பகுதியில் உள்ள பல பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Similar News