கொட்டும் மழையில் தமிழகம் முதல்வர்
மயிலாடுதுறையில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பங்கேற்ற நடைபயண ரோடு ஷோ நிகழ்ச்சியில் கொட்டும் மழையை பொறுட்படுத்தாமல் மழையில் நனைந்தவாறு பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்ற முதலமைச்சர்;
மயிலாடுதுறையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றி வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறையில் உள்ள பூம்புகார் சாலையில் இருந்து கச்சேரி சாலை வரை 4 கிலோமீட்டர் தூரம் இரவு 7.30 மணி அளவில்ஏழை ரோடு ஷோ நிகழ்ச்சியாக நடை பயணமாக நடந்து சென்று பொது மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து மனுக்களை பெற்றார். சிறுவர்களுடனும், குழந்தைகளை தூக்கி கொஞ்சியும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பொதுமக்களின் செல்போனை வாங்கி செல்பி எடுத்து தந்து மகிழ்ந்தார். இந்நிலையில் திடீர் என்று மழை பெய்த நிலையில் மழையில் குடை பிடித்துக் கொண்டும், மழையில் நனைந்தவாரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொது மக்களை சந்தித்து கைகுலுக்கி மனுக்களையும் பெற்றார். தொடர்ந்து மழை விட்ட நிலையில் கச்சேரி சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட திமுக கட்சி அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ திருவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து புறப்பட்டார். இரவு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி இன்று மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.