புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அடுத்த மன்னகுடி, பிடாரி காட்டை சேர்ந்தவர் சிவாஜி (55). இவருக்கு திருமணம் ஆகி 23 வருடமான நிலையில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று திடீரென்று அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மனைவி நாகுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.