அறந்தாங்கி அருகே காரணிக்காடு கிராமத் தைச் சேர்ந்தவர் பர்வீன் (41). பசுமாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை தேடி சென்ற பர்வீன் கருங்குழி காடு கிராமத்தில் உள்ள ஏரியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்ததும் திருச்சி சரக டிஐஜி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தா, அறந்தாங்கி டிஎஸ்பி ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் செந்துார்பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர் கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கருங்குழி காடு கிராமத்தை சேர்ந்த காளிதாஸ்(27) என்பவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர். விசாரணையில்,மது போதையில், பர்வீனை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன் றபோது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவர் கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாகவும், அதை மறைப்பதற்காக ஏரியில் மூழ்கடித்து தப்பிவிட்டதாகவும் காளிதாஸ் தெரிவித்தார். இதையடுத்து காளிதாசை போலீசார் கைது செய்தனர்.