சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பிக்கு ஆதரவு போராட்டம்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில்  அனைத்து கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்:-;

Update: 2025-07-23 18:40 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றது செய்தியாளர்களுக்கு பேட்டி அளத்தத விவகாரத்தின் தொடர்ச்சியாக அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடி க்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், ஓய்வூதியர்கள், ஓய்வு பெற்ற காவலர் அமைப்பினர், நம் மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீரமணி ஜெயக்குமார், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் குமார், பாஜக கோவிசேதுராமன், ரயில் சுந்தர் பாமக தங்கஅய்யாசாமி உட்பட பொதுமக்கள் சுமார் 250 பேர் பங்கேற்றனர். குறிப்பாக  பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யக் கோரிக்கை வைத்தனர்.

Similar News