கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசையும் மக்கள் பிரதிநிதிகளையும் அவமதிக்கும் வகையில் ஒன்றிய அரசு அதிகாரிகள் நடந்து கொண்டதாக எம்எல்ஏ குற்றச்சாட்டு.
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசையும் மக்கள் பிரதிநிதிகளையும் அவமதிக்கும் வகையில் ஒன்றிய அரசு அதிகாரிகள் நடந்து கொண்டதாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குற்றம் சாட்டி பேசினார்;
அரியலூர், ஜூலை.29- கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசையும் மக்கள் பிரதிநிதிகளையும் அவமதிக்கும் வகையில் ஒன்றிய அரசு அதிகாரிகள் நடந்து கொண்டதாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குற்றம் சாட்டினார் மேடையில் பிரதமர் பேசும்போது மேடையில் அமர்ந்திருந்த தமிழ்நாடு அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிடாமல் பேசியது அதிர்ச்சி அளிப்பதாக தனது ஆதங்கத்தையும் மனக்குமுறலையும் கொட்டிய சட்டமன்ற உறுப்பினர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா பிரகதீஸ்வரர் கோவிலை கட்ட தொடங்கிய 1000வது ஆண்டு நிறைவு விழா மற்றும் நினைவு நாணயம் வெளியீடு என 27ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார் பிரதமர் கலந்து கொண்ட இந்த விழாவில் பிரதமர் வரவேற்பு முதல் நிகழ்ச்சி முடியும் வரை ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு அரசை பல்வேறு விதங்களில் புறக்கணித்ததோடு அவர்களை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டதாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் பிரதமர் வருகையின்போது அவரை வரவேற்க தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர் ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மட்டுமே வரவேற்பில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது ஆனால் அங்கு இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு அனுமதி வழங்கவில்லை. பாஜக மாநில தலைவர், பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அமைச்சர் சிவசங்கருக்கு அனுமதி வழங்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் பிரதமர் வருகை குறித்த அரசு விளம்பரத்தில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் எனது பெயர் இடம் பெறாமல் புறக்கணித்ததனர் ஒன்றிய அரசு மூலம் நடைபெறும் விழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றிய அரசு சார்பில் எனக்கோ அமைச்சர் சிவசங்கருக்கோ வழங்கப்படவில்லை. அமைச்சர் சிவசங்கருக்கு விழாவிற்கான அழைப்பிதழை மாநில அதிகாரிகள் வழங்கினர் ஆனால் எனக்கு அழைப்பிதழே வழங்கவில்லை இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த பிறகு தான் எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது விழா நடைபெறும் அரங்கில் மூன்று பேர் உட்காரும் ஷோபாவில் நானும் ஏழாவது வரிசையில் உட்கார வைக்கப்பட்டேன் எனக்குப் பின்னால் எட்டாவது வரிசையில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உட்க்கார வைக்கப்பட்டிருந்தது மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலாகும் ஆனால் எங்களுக்கு முன்னால் பாஜக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பல்வேறு கல்வி நிலைய நிர்வாகிகள் என பலர் முன்வரிசையில் உட்கார வைக்கப்பட்டு எங்களை பின் வரிசையில் உட்கார வைக்கப்பட்டிருந்தது சங்கடமாக இருந்தது நிகழ்ச்சியில் பிரதமர் பேசும்போது மேடையில் அமர்ந்திருந்த ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர் மாநில பாஜக தலைவர் ஆகியோர்களின் பெயர்களை குறிப்பிட்ட பிரதமர் மேடையில் அமர்ந்திருந்த தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர்களின் பெயர்களை குறிப்பிடாமல் தமிழ்நாடு அமைச்சர்கள் என கூறியது அதிர்ச்சி அளித்தது ஒன்றிய அரசாங்கம் நடத்தும் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கூட்ட அரங்கில் சுமார் 5 மணி நேரம் உட்கார வைக்கப்பட்ட நிலையில் தண்ணீர் கூட கொடுக்கவில்லை பாஜக நிர்வாகிகள் கூட தண்ணீர் இல்லாமல் மயக்கம் அடையும் சூழலில் இருந்தவர்கள் அருகில் அமர்ந்திருந்த மடாதிப்பதிகளிடமிருந்த பிஸ்கட் மற்றும் பிரட்டுகளை வாங்கி சாப்பிட்டு தங்கள் உயிரை காத்துக் கொண்டதை பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது பிரதமர் பேச்சின் போது கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் வரை ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வகையான எந்த திட்டமும் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளித்தது ஆயிரம் ரூபாய் நாணயம் வெளியீடு ராஜ ராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் என பிரதமர் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது இதில் எனக்குள்ள சந்தேகம் 1972 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைத்துள்ளதை பிரதமர் தெரிந்து பேசினாரா தெரியாமல் பேசினாரா என தெரியவில்லை மேலும் பிரதமர் வெளியிட்ட ஆயிரம் ரூபாய் நாணயத்தில் உள்ள ராஜேந்திர சோழனின் உருவப்படம் சிலை அமைக்கப்படும் என சொல்லி உள்ள உருவப்படம் யாரால் அங்கீகரிக்கப்பட்டது. தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படமா அல்லது சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக உலாவி வரும் படமா என்பது தெரியவில்லை சமூக வலைதளங்களில் உலாவி வரும் ராஜேந்திர சோழனின் படம் அங்கீகரிக்க பட்ட படம் அல்ல. எனவே ராஜேந்திர சோழன் எப்படி இருப்பார் என வல்லுனர்களைக் கொண்டு குழு அமைத்து புதிய உருவப்படத்தை அமைத்து அதன் அடிப்படையில் சிலை அமைக்க வேண்டும் சமூக வலைத்தளங்களில் உள்ள உருவப் படத்தை வைத்து சிலை அமைக்க கூடாது என சட்ட மன்ற உறுப்பினர் கண்ணன் கூறினார் மேலும் ஒன்றிய அரசு ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் முன்பாகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரையை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டு அது கடந்த மூன்று வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது மேலும் ராஜேந்திர சோழனின் பெருமைகளையும் சோழர்களின் தொன்மைகளை பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கவும் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரியை தூர்வாரி சுற்றுலா தளமாக மாற்ற நிதி ஒதுக்க உள்ளார் இதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்