"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் தொடக்கம்
மதுரை அருகே 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.;
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று (ஆக.2 ) காணொளி காட்சி வாயிலாக 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்து , திட்ட அரங்கினை பார்வையிட்டு , காச நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களையும் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.