ரேஷன் அரிசி கடத்தியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது;

Update: 2025-08-03 09:53 GMT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மாதன் கோவில் ரோடு, கிருஷ்ணன் கோவில் ஜங்ஷனில் அசோக் லைலான்ட் தோஸ்த் வாகனத்தில் 40 மூடைகளில் சுமார் 2000 கிலோ ரேசன் அரிசியை கடத்திய வழக்கில் கோவில்பட்டி, ஊரணி 1வது தெருவைச் சேர்ந்த லுக்கா அசாரியா மகன் முத்துமாரியப்பன் என்ற சின்னமாரி (33) என்பவர் 16.07.2025 அன்று கைது செய்யப்பட்டார்.  அவரை கள்ளச்சந்தைகாரர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க கு.பொ.வ.கு.பு. துறைமதுரை, தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அறிவுரையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப் பிறப்பித்தன் பேரில், 01.08.2025ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  தொடர்ந்து பொது விநியோகத்திட்ட அரிசியை கள்ளச்சந்தையில் பதுக்கும் கடத்தலில் ஈடுபடும் எதிரிகளை கள்ளச்சந்தைகாரர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News