அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்போன் மற்றும் பர்ஸ் திருடிய வாலிபரை தர்மபுரி நகர காவலர்கள் கைது செய்தனர்;

Update: 2025-08-04 06:07 GMT
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக வந்த சுதா என்பவரிடமிருந்து அருகாமையில் இருந்த மர்ம நபர் ஒருவர் அவரது பர்ஸ் மற்றும் செல்போனை திருடி சென்றுள்ளார். இது குறித்து நேற்று தர்மபுரி பி1 காவல் நிலையத்தில் சுதா புகார் அளித்ததன் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இன்று காலை மாதேமங்கலத்தை சேர்ந்த வினோத் என்பவரை காவலர்கள் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து பர்ஸ் & செல்போனை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News