ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி மீன்சுருட்டி தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மீன்சுருட்டி தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-08-06 10:41 GMT
அரியலூர், ஆக.6- ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி மீன்சுருட்டி தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (35) இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஜெயங்கொண்டத்திலிருந்து ஆண்டிமடம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சதீஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண்டிமடம் அரசு டாஸ்மாக் கடை அருகே வந்தபோது சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள தடுப்பு கட்டையின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் சதீஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீசார் சாலை விபத்தில் பலியான சதீஷின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து போன தலைமை காவலர் சதீசுக்கு, சரண்யா என்கின்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் ஆண்டிமடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News