காய்த்து குலுங்கும் தக்காளி
குன்னூர் சிம்ஸ் பூங்கா பல பண்ணையில் சுற்றுலா பயணிகள் கண்ட வியப்பு;
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளது. பூங்காவின் அருகே பழ பண்ணை அமைந்துள்ளது இந்த பண்ணையில் அரிய பழ மரமான பெர்சிமன் மற்றும் பச்சை நிற ஆப்பில்,பேரிக்காய், ஆரஞ்சு, பிளம்ஸ், லிச்சி உள்ளிட்ட பழ மரங்கள் உள்ளன. இதில் பெர்சிமன் பழத்தின் தாயகரம் ஆஸ்திரேலியா நாடு ஆகும். இந்த பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாக உள்ளது. பெர்சிமன் பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது இந்த பழத்தை மரத்தில் இருந்து பறித்து நேரடியாக சாப்பிட முடியாது. பழத்தை ஒரு நாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊற வைத்து கழுவி, அதன் பின்னரே சாப்பிட வேண்டும். பெர்சிமன் பழம் மருத்துவ குணம் உடையது. குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது . தற்போது இங்குள்ள 30க்கும் மேற்பட்ட மரங்களில் பெர்சிமன் பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்துள்ளது தற்போது சிம்ஸ் பூங்காவில் பெர்சிமன் பழங்களின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது பெர்சிமன் பழ சீசன் ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் வரை இருக்கும். குன்னூரில் நிலவும் தட்ப வெப்பநிலை பெர்சிமன் மரம் வளர ஏற்றதாக உள்ளது. தற்போது குன்னூர் பழ பண்ணையில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. பணியாளர்கள் பழங்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பழ பண்ணைக்கு நேரடியாக வந்து இந்த பழங்களை வாங்கி கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் தரிசிமன் பழங்கள் பறவைகள் மற்றும் குரங்குகள் உண்பதால் சாகுபடி குறைய வாய்ப்பு உள்ளது இதனை பாதுகாக்கும் விதமாக தோட்டக்கலை துறையினர் பெர்சிமன் பழங்கள் காய்த்துள்ள மரங்களின் மீது வலைகள் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் பெரிமன் பழங்களின் சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர் மேலும் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்