கர்நாடகா பூங்காவில் இதமான காலநிலையால் சுற்றுலாப் பயணிகள் பரவசம்
புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி;
ஊட்டி – கர்நாடகா பூங்காவில் இதமான காலநிலையால் சுற்றுலாப் பயணிகள் பரவசம் ஊட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கர்நாடகாக பூங்கா, தற்போது இதமான காலநிலையால் சுற்றுலாப் பயணிகளின் மனதை கொள்ளை கொள்ளும் இடமாக மாறியுள்ளது. காலை நேரத்தில் மிதமான பனிமூட்டம், சூரிய ஒளியின் வெப்பமின்றி வீசும் குளிர்காற்று, மலர்களின் மணம் – அனைத்தும் இணைந்து இயற்கையின் ஓவியம் போல காட்சியளிக்கின்றன. காலை முதலே குடும்பங்கள், மாணவர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலரும் பூங்காவுக்கு வந்து, பசுமையான புல்வெளிகளில் அமர்ந்து ஓய்வெடுத்து, வண்ணமயமான மலர்களின் நடுவே புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர். பூங்காவை வந்தடைந்த சென்னை வாழ் பிரியா என்பவர், “ஊட்டி என்றாலே அழகான காட்சிகள் தான், ஆனால் இன்று காலநிலை வேற லெவல். மலர்களின் நிறம், குளிர் காற்று – இவை மனதை மறக்க வைக்கிறது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், கோயம்புத்தூரில் இருந்து வந்த ஓய்வுபெற்ற தம்பதி முரளி – ராதா, “நாங்கள் வருடாவருடம் வருவோம். ஆனால் இம்முறை காலநிலையும் பூங்காவின் பராமரிப்பும் மிக அருமை. பழைய நினைவுகள் எல்லாம் மீண்டும் வந்துவிட்டது போல உள்ளது,” என்றனர். பூங்கா நிர்வாகம் சுற்றுலாப் பயணிகள் பூங்காவின் சுத்தத்தையும் இயற்கையின் அழகையும் பாதுகாக்கும் விதமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.