உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மெல்ல கற்கும் மாணவிகளுக்கு திறன் பயிற்சி

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மெல்ல கற்கும் மாணவிகளுக்கு திறன் பயிற்சி நடைபெற்றது.;

Update: 2025-08-12 12:05 GMT
அரியலூர் ஆக.12- உடையார் பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின்படி மெல்ல கற்கும் மாணவிகளுக்கு திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் தலைமை ய ஆசிரியர் முனைவர் முல்லை கொடி தலைமை வகித்தார். திறன்பயிற்சி புத்தகத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மெல்லகற்கும் மாணவிகளுக்கு வழங்கி மாணவிகளிடம் பயிற்சி புத்தகத்தை நீங்கள் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மொழிப்பாடம் கணிதம், கற்று கொடுப்பதை கவனமாக கேட்டு படித்து புத்தகத்தில் உள்ள பயிற்சியை ஒவ்வொரு நாளும் செய்து உங்கள் திறனை மேம்படுத்தி சகமாணவிகள் போல நீங்களும் கல்விகற்று சிறப்படைய வேண்டும் என்றார். நிகழ்வில் உதவித்தலைமை ஆசிரியர் இங்கர்சால் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் தமிழரசி, பாவை சங்கர், காமராஜ், தமிழாசிரியர் இராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News